The Scientific Method: Steps, Terms and Examples
The steps of scientific method
- Observation
- Hypothesis
- Experiment
- Theory or law
- Prediction
Observation
The first step in scientific method is to make careful observations to collect data. The data may be drawn from a simple observation, or they may be obtained from experiments.
Hypothesis
From an analysis of these observations and experimental data, a model of nature is hypothesized. The hypothesis is an assumption that is made in order to draw out and test its logical or empirical consequences. We should be able to confirm it by testing. Testing of the hypothesis is called the experiment.
Experiment
An experiment is a controlled procedure carried out to discover, test, or demonstrate something. An experiment is performed to confirm that the hypothesis is valid. If the results of the experiment do not support the hypothesis, the experimental procedure must be checked. If the procedure is alternate and results still contradict the hypothesis, then the original hypothesis must be modified. Another experiment is then design to test the modified hypothesis.
Theory
If the experimental results confirm the hypothesis, the hypothesis becomes a new theory about some specific aspect of nature, a scientifically acceptable general principle based on observed facts.
Prediction
After a careful analysis of the new theory, a prediction about some unknown aspect of nature can be made.
விஞ்ஞான முறையின் படிமுறைகள்
- அவதானம்
- கருதுகோள்
- பரிசோதனை
- கொள்கை அல்லது விதி
- எதிர்வு கூறல்
அவதானம்
தகவல்கள் சேகரிக்கும் பொருட்டு மிகவும் கவனமாக அவதானிப்புகளை மேற்கொள்ளலே
விஞ்ஞானமுறையின் முதற்படிமுறை. தகவல்கள் பரிசோதனைகளின் முடிவுகளின் ஊடாகவோ
அல்லது எளிய அவதானங்களின் ஊடாகவோ பெறப்படலாம்.
கருதுகோள்
அவதானங்கள்¸ பரிசோதனைகள் மூலம் பெறப்பட்ட தகவல்களின் பகுப்பாய்விலிருந்து
இயற்கையின் மாதிரி ஒன்று கருதுகோளாக்கப்படும். கருதுகோளானது தர்க்க ரீதியானதும்
அனுபவ ரீதியானதுமான விளைவுகளைச் சோதிப்பதன் பொருட்டு வடிவமைக்கப்பட்ட எடுகோள்
ஆகும். சோதித்துப் பார்ப்பதன் மூலம் கருதுகோளை நாம் உறுதிப்படுத்த முடியும்.
கருதுகோளைப் பரிசீலிப்பது பரிசோதனை என்றழைக்கப்படும்.
பரிசோதனை
ஏதாவது ஒரு விடயத்தைக் கண்டுபிடிக்கவோ சோதிப்பதற்கோ அல்லது செய்து காட்டுவதற்கோ
மேற்கொள்ளப்படும் ஒரு கட்டுப்பாட்டிலமைந்த செயல்முறையே பரிசோதனை எனப்படும்.
கருதுகோளை உறுதிப்படுத்தும் பொருட்டு மேற்கொள்ளப்படுவதே பரிசோதனையாகும்.
கருதுகோளின் பொருத்தப்பாட்டிற்கு பரிசோதனை முடிவுகள் சரியாக அமையாவிடில்¸
பரிசோதனைச் செயல்முறையானது சரிபார்க்கப்பட வேண்டும். பரிசோதனை முறை
மாற்றியமைக்கப்பட்டும் முடிவுகள் முரண்பாடாக அமையும் சந்தர்ப்பத்தில் முதலாவதாய்
முன்வைக்கப்பட்ட கருதுகோள் திருத்தியமைக்கப்பட வேண்டும். திருத்தப்பட்ட கருதுகோளைச்
சோதிக்க மீண்டும் ஒரு பரிசோதனை வடிவமைக்கப்பட வேண்டும்.
கொள்கை
பரிசோதனை முடிவுகள் கருதுகோளை உறுதிப்படுத்துமாயின் கருதுகோளானது இயற்கையின்
குறித்த அம்சம் தொடர்பான புதிய கொள்கையாக மாறுகின்றது. கொள்கை என்பது
அவதானிக்கப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் விஞ்ஞான ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட
தத்துவமாகும்.
எதிர்வுகூறல்
புதிய கொள்கையைக் கவனமாக ஆராய்ந்த பின்பு இயற்கையின் அறியாததொரு அம்சம்
பற்றிய எதிர்வு கூறலை முன்வைக்கலாம்.
